நடிகர் கார்த்திக் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள குடும்ப செண்டிமெண்ட் படமான ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வெகுநாட்களுக்கு பின்னர் வெளிவந்துள்ள மனதை தொடும் குடும்பப்படம் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக குடும்ப ஆடியன்ஸ்கள் கூடி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‘சின்னபாபு’ படத்தை பார்த்து தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்னபாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம் என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.