கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக ஆங்காங்கே பெய்து வரும் கனமழையின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் மழையின் பாதிப்புக் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆழப்புழா, கோட்டயம் போன்ற பல்வேறு பகுதிகளை உள்ளடக்கி கிட்டத்தட்ட 569 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 86 ஆயிரத்து 598 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் கடந்த மேமாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழைக்கு 107பேர் உயிரிழந்த நிலையில், தற்போது இந்த மாதம் 9ஆம் நாளிலிருந்து அங்கு பெய்துவரும் பருவமழைக்கு இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.