ஆபிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் நாடு திரும்புகின்றார்.
இந்த பயணத்தின் தொடக்கத்தில் ரூவான்டா, மற்றும் உகண்டா நாடுகளுக்கு சென்றிருந்து அவர், அங்கு அந்தந்த நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு நடாத்தியதுடன் ஒபந்தங்களையும் மேற்கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்கா சென்றிருந்த இந்தியப் பிரதமர் அங்கு ஜோகன்னஸ்பெர்க் நகரில் நேற்று நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுடனும் இந்திய்ப பிரதமர் தனித்தனியாக சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார்.
இந்த சந்திப்புக்களை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இருந்து புதுடெல்லி நோக்கி புறப்பட்டுள்ளார்.