பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று அங்கு ஆட்சியமைக்க உள்ள இம்ரான்கானுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொலைபேசி ஊடாக அவர் இந்த வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளதாகவும், இதன்போது பாகிஸ்தானில் சனநாயகத்தின் வேர்கள் ஆழமான வேர் விடட்டும் என்று இந்தியப் பிரதமர் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை தமது இந்த தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அண்டை நாடுகளுடனான நட்புறவு தொடர்பில் முன்னர் கருத்துத் தெரிவித்தருந்த இம்ரான்கான், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளை இந்தயாவுட்ன பேசி தீர்க்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்துக்கது.