இந்தியாவுக்கு ‘எஸ்.டி.ஏ-1’ என்ற சிறப்பு தகுதியை அமெரிக்கா வழங்கி உள்ளது.
ஆசியா கண்டத்தில் யப்பானுக்கும், தென்கொரியாவுக்கு மட்டுமே இந்த தகுதியை அமெரிக்கா வழங்கியுள்ள நிலையில், தற்போது இந்தியாவுக்கும் வழங்கப்பட்டுள்ளமையானது தெற்காசிய நாடுகளில் குறித்த இந்த தகுதியைப் பெற்றுள்ள ஒரே நாடு என்ற பெயரை அது பெறுகிறது.
இதன்மூலம் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்கு உரிய பொருட்களை வாங்கும் தகுதியை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்கு உரித்தான ரசாயன ஆயுதங்கள் அல்லது உயிரி ஆயுதங்கள், குற்ற கட்டுப்பாடு பொருட்களை எஸ்.டி.ஏ-1 அந்தஸ்து நாடுகள் மட்டுமே அமெரிக்காவிடம் இருந்து வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.