சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்தை கைவிடக் கோரி நடைபயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று நள்ளிரவில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக நேற்றுப் பகல் வேளை இந்த நடைபயணத்தை மேற்கொள்ள முயன்ற 400இற்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க்பபட்டனர்.
குறித்த நடைபயணத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், தடையை மீறி அவர்கள் நடைபயணத்தை மேற்கொண்ட நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அனைவரும் நேற்று நள்ளிரவு வேளை விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் சென்று நடைபயணத்தை தொடர்கியதால் அவர்களை காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மத்தியகுழு உறுப்பினர் உறுப்பினர் வாசுகி உள்ளிட்ட 130 பேர் அவ்வாறு மீண்டும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.