சட்டப்பேரவை தேர்தல் வந்தால் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று நடந்த கூட்டத்தில் கூடிய பெரும் எண்ணிக்கையான மக்கள் முன்னிலையில் உரையாற்றிய போதே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் கூட்டம் நடாத்திய உரையாற்றிய மன்னார் குடியில் தமக்கும் அவ்வாறான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எத்தனையோ திட்டங்களைக் கொண்டுவந்தார் என்றும், அது மற்ற மாநிலங்களாலும் கடைப்பிடிக்கப்பட்டது என்ற போதிலும், இன்று அவ்வாறு இல்லை என்று கூறியுள்ளார்.
முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழத்தின் ஆட்சியை அகற்ற 1972ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தைத் தொடங்கினார் என்றும், 40 ஆண்டுகளுக்கு பிறகு அதே சரித்திரம் திரும்பி உள்ளது எனவும் தினகரன் தெரிவித்துள்ளார்.