சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம்
‘கனா’. நடிகரும், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட
அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படம் மகளிர் கிரிக்கெட்டை
மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.
நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை
மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கிரிக்கெட்டை
மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் பெண் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி
இருக்கும் முதல் படம் இது.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. பின்னணி வேலைகள்
மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசர் மற்றும் இசையை
ஆகஸ்ட் 23ம் தேதி வெளியிட இருப்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார்.
தற்போது கனா படத்தின் பாடல்களை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிகவும்
பிரபலமான ஸ்மிரிதி மந்தனா வெளியிட இருக்கிறார். இதை சிவகார்த்திகேயன் தனது
டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.