கனடாவில் கஞசா பயன்பாடும் விற்பனையும் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில், கனடா செல்லும் தமது நாட்டு மக்கள் அங்கு கஞசா புகைப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சீன அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தத்தமது உடல் உள ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால், இவ்வாறு கஞ்சா புகைப்பதை தவிர்க்குமாறு, ரொரன்ரோவில் உள்ள சீனத் தூதரகம் தனது இணையத்தளம் ஊடாக அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
கடந்த 17ஆம் நாள் நிபதந்தனைகளுக்கு உட்பட்டு கனடாவில கஞ்சா பயன்பாடும் விற்பனையும் சட்டபூர்வமாக்கப்பட்டுளள நிலையில், கனடாவுக்கும் பயணிக்கும் தமது நாட்டு மக்களுக்கு சில நாடுகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஜப்பான், தென் கொரிய ஆகிய நாடுகள், சீனாவின் இவ்வாறான எச்சரிக்கைக்கும் அப்பால் சென்று, கனடாவில் சென்று கஞ்சா பயன்படுத்தியிருந்தாலும், தத்தமது நாடுகளில் அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டி வரலாம் என்று எச்சரித்துள்ளன.
எந்த நாட்டில் அது சட்டபூர்வமாக இருந்தாலும், தமது நாட்டு குடிமக்கள் கஞ்சாவை புகைப்பது, கொள்வனவு செய்வது, வைத்திருப்பது, பிறருக்கு கெர்டுப்பது என்பன தண்டனைக்குரிய குற்றம் என்று தென் கொரிய தூதரகம் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.