கனடாவின் மொத்த விற்பனை மற்றும் உற்பத்தி சார் விற்பனை என்பனவற்றில் வீழ்;ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் கனடாவின் மொத்த மற்றும் உற்பத்திசார் விற்பனைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த நொவெம்பர் மாதத்தில் மொத்த விற்பனை வர்த்தகம் ஒரு வீதத்தினால் வீழ்ச்சியடைந்து 63 பில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்தது எனவும், இது ஒக்ரோபர் மாதத்தில் 0.7 வீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உற்பத்தி சார் விற்பனையும் கடந்த நொவெம்பர் மாதத்தில் 1.4 வீதத்தினால் குறைந்து 57.3 பல்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக இவ்வாறு மொத்த விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மொத்த விற்பனையில் வீழ்ச்சி ஏற்படாது எனவும், உற்பத்திசார் விற்பனையில் 0.9 வீத வீழ்;ச்சி பதிவாகும் எனவும் முன்னதாக பொருளியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.