கடும் பனி மூட்டமான காலநிலை பிரித்தானியா முழுவதும் போக்குவரத்து தடைகளுக்கு வழிவகுக்கும் என வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய நாள் (செவ்வாய்க்கிழமை) முழுவதும் கடும் பனியுடனான காலநிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்து, வட-மேற்கு பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகளுக்கு நேற்று இரவு முதல் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவின் பிற பகுதிகள் இன்று நண்பகல் முதல் கடும் பனியுடன் கூடிய காலநிலையால் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாகன ஓட்டுனர்களை மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன் வீதி மற்றும் ரயில் போக்குவரத்து தாமதங்கள் குறித்த எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.