கனேடியர்கள் போக்குவரத்திற்காக அதிகளவு நேரத்தை செலவிட்டு வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் கனேடியர்கள் குறைந்தபட்சம் அறுபது நிமிடங்களை பணிக்காக செல்வதற்காக செலவிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
காரில் பயணம் செய்வர்களே அதிகளவில் இவ்வாறு போக்குவரத்திற்காக நேரத்தை செலவிடுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
அன்னி குறொம்பீ(யுnnநை ஊசழஅடிநை) என்ற பெண் கடந்த பதினைந்த ஆண்டுகளாக நாள் தோறும் பணியிடத்திற்கு செல்வதற்காக ஒரு மணித்தியாலத்தை செலவிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.