பிரித்தானியாவில் பிரிக்ஸிட் தொடர்பில் மீண்டும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை அந்நாட்டு எதிர்க்கட்சியான தொழிற் கட்சி கொண்டுள்ளது.
பிரிக்ஸிட் தொடர்பில் மீண்டும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதற்கு தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் (துநசநஅல ஊழசடிலn) இது தொடர்பிலான யோசனையை விரைவில் முன்மொழிவார் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய மக்களிடம் பிரிக்ஸிட் குறித்து கேட்டறிந்து கொள்ள வேண்டுமென கடந்த திங்கட்கிழமை கோர்பின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத் தேர்தல் அல்லது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டினையே அவர் கொண்டுள்ளார்.
எவ்வாறெனினும், கட்சியின் ஆதரவார்கள் பலர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.