ரொரன்டோ மாவட்ட பள்ளிக்கூடச்சபை உத்தேச திட்டத்திற்கு மாகாண கல்வி அமைச்சர் லீசா தொம்சன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
பணியாளர்களுக்கு ஐபோன்களை வழங்குவதற்காக பல மில்லியன் டொலார்களை செலவிடுவதற்கு பள்ளிக்கூடச்சபை திட்டமிட்டுள்ளது.
இந்த விடயம் தமக்கு தெரிய வந்த காரணத்தினால் திட்டம் கைவிடப்பட்டது எனவும் இல்லாவிட்டால் பாரியளவு பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் எனவும் தொம்சன் தெரிவித்துள்ளார்.
நிர்வாக அதிகாரிகளுக்கு பாரிய பொருட்செலவில் கைப்பேசிகள் கொள்வனவு செய்ய ரொரன்டோ மாவட்ட பள்ளிக்கூட சபை எடுத்த முயற்சி ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 3250 அதி நவீன ரக ஐபோன்களை தமது பணியாளர்களுக்காக கொள்வனவு செய்ய சபைத் திட்டமிட்டிருந்தமை குறித்த ஆவணங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.