வானொலி, தொலைக்காட்சிகளில் சமஸ்கிருத செய்தி வாசிப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக ஹிந்தியைத் திணித்து வருகிற பா.ஜ.க. அரசு, அடுத்தகட்டமாக செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளைத் தொடங்கி இருக்கிறது.
இந்தியாவில் 25 ஆயிரம் பேர் கூடப் பேசாத ஒரு மொழிக்கு அனைத்து மாநில மொழி வானொலிகள், தொலைக்காட்சிகளிலும் 15 நிமிடங்கள் செய்தி அறிக்கை வாசிக்க வேண்டும் என்ற கட்டளையை மோடி அரசு பிறப்பித்து இருக்கிறது.
இதனை ஆரம்பத்தலேயே முறியடிக்க வேண்டியது கட்டாயமாகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.