சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்தி போட்டியிடமாட்டார் என்றும் அதில் அவர் உறுதியாக உள்ளதாகவும் கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
நேற்று தனது அரசியல் வருகையை உறுதி செய்த ரஜினி, ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தார்.
கட்சியின் மேற்பார்வையாளராக ரஜினிகாந்த் நியமித்துள்ள தமிழருவி மணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “ரஜினியால் மட்டுமே வெளிப்படையான, ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க முடியும்.
அவருக்கு வேறு எந்த அழுத்தங்களும் கிடையாது என்றும் தமிழருவி மணியன் மேலும் கூறியுள்ளார்.