நூறு நாட்களுக்கு முகக் கவசத்தை அணியுமாறு அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் மக்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்றதும் இதனை அமுல்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனாத் தொற்றானது மிகப்பெரிய அளவில் அமெரிக்காவில் பரவி வரும் நிலையில் முகக்கவசம் மூலமே மக்களை பாதுகாக்க முடியும் என்று ஜோ பைடன் பிரசாரம் செய்து வருகிறார்.
குறிப்பாக முகக் கவசம் அணியாதவர்கள் அடுத்தவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் முகக்கவசம் அணிவது தேசியக் கடமை என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.