தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை அடுத்து சுமார் 8 மாதங்களுக்கு பின்னர், பல்வேறு தளர்வுகளுடன் இன்று கல்லூரிகள், விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன
கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையம் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் படிக்கும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பை கருத்திற்கொண்டு, முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த 2ஆம் திகதி கல்லூரிகள் திறக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அரசு உத்தரவின்படி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இறுதியாண்டு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக கல்லூரிகள் மற்றும் விடுதிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.