தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரை சேர்ந்த 2 சிறுமிகள் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், நேற்று காலை 2 சிறுமிகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
இவர்களைக் கண்டுபிடித்த இந்தியப் படையினர் நடத்திய விசாரணையின் போது, அவர்கள் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இரண்டு சிறுமிகளையும் இந்திய படையினர் இன்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இருநாட்டு எல்லைக் கட்டுப்பாடு பகுதி வழியாக இவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.