விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று லக்னோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் விவசாயிகளின் போராட்டம்,12-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன், இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார்.
காவல்துறையினர் அவரையும் ஆதரவாளர்களையும் தடுத்து நிறுத்திய போது, மோதல்கள் ஏற்பட்டன. இதையடுத்து நடத்தப்பட்ட தடியடியில், பலர் காயமடைந்தனர்.
நீண்டபோராட்டத்திற்கு பின்னர், அகிலேஷ் யாதவை நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.