தனக்கு அறிக்கை நாயகன் என்ற பட்டத்தை முதல்வர் பழனிசாமி வழங்கியதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின், தெரிவித்துள்ளார்.
“முதல்வர் பழனிசாமி ‘அறிக்கை நாயகன்’ என்ற பட்டத்தைக் கொடுத்திருப்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.
“எதிர்க்கட்சிகள் அறிக்கை அரசியல் தான் செய்யும். ஆளும் கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சிகளின் வேலை.
அந்த வேலையைத் தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.
எனக்கு ‘அறிக்கை நாயகன்’ பட்டம் என்றால், நான் ‘ஊழல் நாயகன்’ என்ற பட்டத்தை முதல்வருக்குக் கொடுக்கிறேன்.” எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.