கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதல்களுக்கு முன்னதாக தவறிழைத்ததற்காக நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மன்னிப்பு கோரியுள்ளார்.
2019 மார்ச் மாதம் நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டு மசூதிகளில் உள்ள வாழிபாட்டாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் 51 பேர் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நீண்ட விசாரணைகளை மேற்கொண்ட நியூஸிலாந்து அரசாங்கம் 800 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் நாற்பத்து நான்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதோடு தாக்குதலைத் தடுக்க முடியாது என்று அந் நாட்டு பாதுகாப்பு ஆணையம் கூறியிருந்தது.
எனினும் காவல்துறை மற்றும் நியூஸிலாந்து பாதுகாப்பு புலனாய்வு சேவை ஆகியவற்றின் தோல்விகளை சுட்டிக்காட்டி விரைவான மாற்றத்தின் அவசியத்தை முன்வைத்துள்ளது.
இந்நிலையிலேயேபிரதமர் பகிரங்கமாக மன்னிப்புக்கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.