மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்கமாட்டோம் என முதல்வர் மம்தா பனர்ஜி தெரிவித்துள்ளார்.
இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர்,
“இந்த மாநிலத்தின் முதல்வராக கூறுகிறேன், தேசிய குடிமக்கள் பதிவேடு , தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை மேற்கு வங்காளத்தில் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
இவை அனைத்தும் மக்களை மாநிலத்தை விட்டு வெளியேற்றுவதற்காக பாரதீய ஜனதா நடத்தி வரும் சூழ்ச்சி ஆகும்.
வெளிமாநிலத்தவர்கள் மூலம் வீடு வீடாக சென்று பா.ஜனதா கட்சி பிரிவினை பிரசாரங்களை மேற்கொள்கிறது. பிரித்தாளும் அரசியல் மூலம் நாட்டை பா.ஜக அழித்துவிட்டது.
மேற்கு வங்காளத்தை குஜராத்தாக மாற்றுவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம். ” என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.