ரொரன்ரோ நோர்த் யோர்க் (North York ) பகுதியில், நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்களும் இரண்டு குடியிருப்பாளர்களும் காயமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ சமூக வீடமைப்பு கட்ட்டத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் இருவரும் புகையை சுவாசித்ததால், கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இரவு 11 மணியளவிலேயே இந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.