இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு உள்ள முக்கியத்துவம் காரணமாக, அங்கு ஆதிக்கம் செலுத்த, பல நாடுகள் போட்டி போடுகின்றன என்ற இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில், மெய்நிகர் முறையில், உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சர்வதேச வர்த்தக போக்குவரத்துக்கு, இந்தோ- பசிபிக் பிராந்தியம், குறிப்பாக, இந்திய பெருங்கடல் பகுதி, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்திய பெருங்கடலுக்கு, பூகோள ரீதியில் பல வசதிகள் உள்ளன. அதனால், அங்கு ஆதிக்கம் செலுத்தவும், தளங்களை அமைக்கவும், பல நாடுகள் முயற்சிக்கின்றன. பொருளாதார செழிப்பு, படை பலம், அதிகரித்து வரும் போட்டி காரணமாக, சீனா, அதிக அக்கறை காட்டி வருகிறது. .” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.