கடலூரில் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபா நாணயத் தாள்களை மர்ம நபரொருவர் கழிவு நீர் வாய்க்காலில் வீசி சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மர்ம நபர் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல ஆயிரம் ரூபா நாணயத் தாள்களை அதிகாலை நேரத்தில் கொண்டு வந்து கிழித்து வாய்க்காலில் வீசிச் சென்றுள்ளமை தெரியவந்தது.
மேலும் அதன் மதிப்பு இந்திய மதிப்பில் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி அரசு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபா நாணயத் தாள்களை பண மதிப்பிழப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.