ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி சபைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு, இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி சபை தேர்தல், 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அதனுடன் சேர்த்து உள்ளூராட்சி அமைப்புகளின் வெற்றிடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகி மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
அத்துடன் வாக்குச்சாவடிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தன
ஜம்முவில் 17 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் 14 தொகுதிகள் என மொத்தம் 31 மாவட்ட வளர்ச்சிக் சபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.