தருமபுரி அருகே மலைப்பாதையில் இன்று மாலை 16 வாகனங்கள், ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் – தொப்பூர் கணவாய் பகுதியில் 2 பாரஊர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பாரஊர்தி ஒன்று திடீரென பழுதாகி, சாலையில் சென்று கொண்டிருந்த 13 வாகனங்களின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.