முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர், ஆ.ராசாவுக்கு எதிராக, காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலர் திருமாறன் மற்றும் செல்வகுமார் ஆகியோர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் பழனிசாமி மீது அவதூறு பேசியதாக, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர், ஆ.ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனடிப்படையில், அவருக்கு எதிராக, வேண்டுமென்றே ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்புவது ஆதாயம் தேடுதல், குறிப்பிட்ட அமைப்பையோ அல்லது மக்களையோ குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.