உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வுள்ளது.
முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனாவை ஒழிப்பதில் 95சதவீத செயற்திறன் கொண்ட பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பிரித்தானியாவில் ஏற்கனவே மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது .
மேலும் பஹ்ரைன், சவுதி அரேபியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் பைசர் தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.