ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கஸ்னியில் நடந்த அதிரடி நடவடிக்கையில் ஆப்கானிஸ்தான் ஆயுதப் படைகள் தலிபான் குழுவின் 18 உறுப்பினர்களை கொலை செய்தனர்.
அத்துடன் இந்த தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாகாணத்தின் அந்தர் மாவட்டத்தின் முல்லா நூ பாபா (Mulla Nu Baba) பகுதியில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது