டிரம்ப் ஆதரவாளர்கள் தலைநகர் வோஷிங்டனில் பேரணி நடத்திய போது, மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவில், ஜனாதிபதி டிரம்பின் வலதுசாரி ஆதரவாளர்கள் தேர்தலில் டிரம்புக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், பல மாகாணங்களில் அவர் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறி தொடர்ந்து பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகைக்கு அருகே இனவெறிக்கு எதிரான ‘அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ட்ரம்புக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.
ட்ரம்ப் ஆதரவு பேரணி வெள்ளை மாளிகையை கடந்த போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, பெரும் வன்முறையாக வெடித்தது.
இரு தரப்பை சேர்ந்தவர்களும், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். இதன்போது கத்திக் குத்து தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.