அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த கீச்சக நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ட்ரம்ப் வெறுப்பை உமிழும் பல கீச்சுகளை தனது கீச்சக பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இவற்றுள் சில, இனப் பாகுபாட்டை தூண்டுவதாக இருந்தன. அத்துடன் சில கீச்சுகள் அரசியல் கருத்து மோதலை அதிகரித்தன.
இதன் காரணமாக கீச்சக நிறுவனம் உறுதி செய்யப்படாத விவாதத்திற்கு உள்ளான தகவல்களை உறுதி செய்யப்பட்டது போன்று ட்ரம்ப் தனது கீச்சகத்தில் தெரிவித்தால் அந்த கீச்சுக்கு கருத்து மற்றும் விருப்பம் வெளியிட தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாக கீச்சக நிறுவனத்தின் பேச்சாளர் ரொய்டர்ஸ் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.