இந்தியா 2ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் கலாசார ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இமயமலை பகுதியில் ஆக்கிரமிப்பு முயற்சி நடந்துள்ளது. ஒப்பந்தங்கள் மீறப்படுகின்றன. இந்திய – பசிபிக் கடல் பிராந்தியத்திலும் இதே போக்கு காணப்படுகிறது. லடாக்கில் பொது எல்லைக்கோடு அருகே இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையான தருணத்தில் நம் இராணுவ வீரர்கள் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர். சீனப் படைகளுடன் மிகுந்த தீரத்துடன் போரிட்டு அவர்களை பின்வாங்கச் செய்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.