அடுத்த 6 மாதங்கள் வரை, கொரோனா தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்று மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம், மிக மோசமாக இருக்கும்.
மேலும் 2 இலட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாவார்கள் என்று, கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிக உயிரிழப்புகளை கொரோனா ஏற்படுத்தக் கூடும்.
கொரோனா இன்னும் மோசமான காலகட்டத்தை எட்டவில்லை. அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு விழிப்பாக இருப்பது நல்லது.
கொரோனா தடுப்பூசியை போடுவதில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இருந்தாலும், மனித குலம் முழுமைக்கும் அமெரிக்கா உதவ வேண்டும்.” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.