ரஷ்யாவில் முதியோர் காப்பகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில், 4 மூதாட்டிகள் உள்ளிட்ட 11 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில், பாஷ்கோர்டோஸ்தான் (Bashkortostan) பிராந்தியத்தில் மரத்தினால் ஆன கட்டிடத்தில் இயங்கி வந்த காப்பகத்தில் 15 முதியவர்கள் தங்கியிருந்தனர்.
நேற்று நள்ளிரவு இந்த காப்பகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, முழு கட்டடமும் எரிந்து நாசமாகியது.
காப்பக ஊழியர் உள்ளிட்ட 4 பேர் மட்டும் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்த போதும், அதற்குள் சிக்கிய 4 மூதாட்டிகள் உள்ளிட்ட 11 உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.