திருகோணமலை- கந்தளாயில், நேற்று பிற்பகல் சிறிலங்கா விமானப்படையின் PT6 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியது தொடர்பாக சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து இடம்பெற்றதை அடுத்து, உயர் மட்ட அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவொன்றை சிறிலங்கா விமானப்படைத் தளபதி நேற்று நியமித்திருந்தார்.
இந்தக் குழுவினர், நேற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று சிறிலங்கா விமானப் படை பேச்சாளர் குறூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.