கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், கொச்சி மாநகராட்சியில், காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் வேணுகோபால், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்விடைந்துள்ளார்.
கேரளாவில் 3 கட்டங்களாக நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில், வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இதில், இடதுசாரிகள் கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.
இந்த நிலையில், கொச்சி மாநகராட்சித் தேர்தலில் வடக்கு தீவு வட்டாரத்தில் போட்டியிட்ட, காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் வேணுகோபால், பாஜ.க வேட்பாளரிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.