இந்தியாவில், முதல்கட்டமாக தடுப்பூசி போடும் திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபா செலவிடவுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதல்கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், தாதிகள், மருத்துவ உதவியாளர்கள் என ஒரு கோடி சுகாதார பணியாளர்கள், 2 கோடி முன்கள பணியாளர்கள் மற்றும் இதயநோய், நீரழிவு நோய் தாக்கம் கொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 27 கோடி பேருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.