பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்சு ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
கொரோனா அறிகுறி தென்பட்டவுடன் ஜனாதிபதி மக்ரோன் பரிசோதனை செய்து கொண்டார் என்றும், அதில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏழு நாட்கள் அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ள அவர் அங்கிருந்தே தனது பணிகளை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரசெல்ஸ் நகரில் கடந்த 10 மற்றும் 11-ம் திகதிகளில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், ஜெர்மனி ஜனாதிபதி மற்றும் ஸ்பெயின், லக்சம்பர்க், பிரதமர்கள் , ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் பங்கேற்று மக்ரோனுடன் தொடர்பில் இருந்த பிரான்ஸ், ஸ்பெயின், லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் பிரதமர்களும், ஐரோப்பிய ஒன்றிய தலைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.