இந்திய தலைநகர் புதுடில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், இன்று நள்ளிரவுக்கு சற்று முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றிரவு 11.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டரில் 4.2ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், உறக்கத்தில் இருந்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகள் மற்றும் மைதானங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
குருகிராமிலிருந்து 48 கி.மீ., தொலைவில், மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதற்ற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.