சீனா விடயத்தில், நேபாளம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
“ சர்வதேச விவகாரங்களில் நேபாளம் தனது தேர்வுகளை சுதந்திரமாக செய்கிறது. ஆனால் அது விழிப்புடன் இருக்க வேண்டும்.
இலங்கை மற்றும் பிராந்தியத்தின் பிற நாடுகளுடன் சீனா கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில் இருந்து நேபாளம் கற்றுக்கொள்ள வேண்டும்.
உட்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் சீனா பல ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளை கடனில் சிக்க வைத்துள்ளது.
சீனா, அதன் உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் நேபாளத்திற்குள் பிற மூலோபாய ஊடுருவல்கள் மூலம் இந்திய நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக இந்தியா கவலை கொண்டுள்ளது.
ஏற்கனவே பிரிக்க முடியாத இரு நாடுகளின் மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக இந்தியாவும் நேபாளமும் தங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.





