இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், தொகுதியான வாரணாசியில் உள்ள அவரது தொகுதி செயலகத்தை இணையத் தளத்தில் விற்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பிரதமரின் செயலக படத்துடன், 7 கோடி 50 இலட்சம் ரூபாவுக்கு விற்கப்படவுள்ளதாக, இணைய விற்பனைத் தளத்தில், விளம்பரம் வெளியாகியிருந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பிரதமர் செயலகத்தை, படம் எடுத்த நபர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.
எனினும், விளம்பரத்தை பதிவிட்ட நபரின் அடையாளத்தை கொண்டு, நடத்தப்பட்ட விசாரணையில், தவறான முகவரியில் கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.