ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இறுதிக்கட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் 51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்னர், முதல்முறையாக, இந்த தேர்தல் இடம்பெற்றுள்ளது.
எட்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை இடம்பெற்றுள்ளது.
இறுதிக்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளதாகவும், இந்த தேர்தலில் மொத்தமாக 51 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், கூறப்படுகிறது.