திரிணமுல் காங்கிரசின், 11 சட்டமன்ற உறுப்பினர்கள், அந்தக் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்துக்கு சென்றுள்ள, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மிட்னாப்பூரில் நேற்று நடத்திய பொதுக்கூட்டத்திலேயே, இவர்கள் பாஜகவில் சேர்ந்துள்ளனர்.
அத்துடன், அந்தக் கட்சியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பா.ஜ.கவில் இணைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க மக்களின் எதிர்காலத்துடன் மம்தா விளையாடுகிறார் என்றும், மாநிலத்தில் இருந்து திரிணமுல் காங்கிரசை வேரோடு அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.