அமெரிக்காவில் வொஷிங்டன் நகரில் அவசரகால நிலை மற்றும் பொதுச் சுகாதார நெருக்கடி நிலை என்பன நீடிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகர முதல்வர் இன்று இது தொடர்பாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வொஷிங்டன் நகரில் வரும், 23ஆம் நாள் இரவு 10 மணியில் இருந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள் காலை 5 மணி வரை, பல்வேறு நடவடிக்கைகளுக்கு தற்காலிக தடை விதித்து, நகர முதல்வர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
அத்துடன், நகரில் அவசரகால நிலை மற்றும் பொது சுகாதார நெருக்கடி நிலை 2021ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக்கவும், வொஷிங்டன் முதல்வர் அறிவித்துள்ளார்.