வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநில விவசாயிகளுடன் காணொலி வழியாக நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன என்று குற்றம்சாட்டினார்.
வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது வேளாண் துறை நிபுணா்கள், அரசியல் கட்சிகள், விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை என்றும் அவா் தெரிவித்தார்.
அத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.