பீஜிங்கிலுள்ள சீனோவாக் பயோடெக் நிறுவனம் கண்டறிந்துள்ள, கொரோனாவாக் என்ற தடுப்பூசி பரிசோதனையை, துருக்கி உள்ளிட்ட நாடுகளில், சீனா மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், கம்போடியாவிலும், தடுப்பூசி பரிசோதனையை நடத்த திட்டமிட்டது. இதற்கும் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள கம்போடியா பிரதமர் ஹன் சென்( Hun Sen), சீன கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்காக, தங்கள் மக்களை பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
உலகளவில் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா தடுப்பூசிகளில், சிறந்த ஒரே ஒரு தடுப்பூசி மருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என கம்போடியா பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்