தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாகக் குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு வைத்தியசாலையில் முதியோர் பாதுகாப்பு நலன் மற்றும் முதியோர்கள் பராமரிப்பாளர்களுக்கான கையேடு வெளியிடும் நிகழ்ச்சி இடம்பெற்றது.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு கையேட்டை வெளியிட்டார். இதனையடுத்து கருத்து வெளியிட்ட அவர்,
“ராஜீவ்காந்தி அரச மருத்துவமனையில், 27 ஆயிரம் பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 4 இலட்சத்து 87 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
அரச மருத்துவமனையில் செய்யப்படும் சேவையை பொதுமக்கள் புருவத்தை உயர்த்தி பார்க்கும் அளவுக்கு வைத்தியர்கள் செயலாற்றி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.





