இல்லத்தரசிகளின் உழைப்பு அங்கீகரிக்கப்படும் வகையில் அவர்கள் செய்யும் வேலைக்கு சரியான ஊதியம் வழங்கப்படும் என்று, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் போதே அவர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
இதன்படி, வீடுகளில் இல்லத்தரசிகள் செய்யும் பணிகளுக்காக, வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு ஊதியம் வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.